திருப்பூர்

புதிய சாலை பணிகள்: எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு

திருப்பூர்

திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் புதிதாக நடைபெறவிருக்கும் சாலைப்பணிகள் குறித்து சு.குணசேகரன் எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட, மாநகராட்சி 32-வது வார்டில் மணியாரம்பாளையம் முதல் கருமாரம்பாளையம், மண்ணரை சந்திப்பு வரை டூரிப் திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள சாலைப்பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட இடங்களை சு.குணசேகரன் எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அதே வார்டில் சின்னக்குழந்தையப்பா நகரில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளையும் சு.குணசேகரன் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் 45-வது வார்டுக்குட்பட்ட நொய்யல் வீதி, பெரியகடை வீதியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், வடிகால் அமைக்கப்படும் பணிகளை சு.குணசேகரன் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும் 48-வது வார்டுக்குட்பட்ட மிலிட்டரி காலனி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கட்டும் பணிகளைசு.குணசேகரன் எம்.எல்.ஏ பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.