வேலூர்

காட்பாடியில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் – மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு பங்கேற்பு

வேலூர்

வேலூர் மாநகர் மாவட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பகுதி, பேரூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் காட்பாடியில் உள்ள மாநகர மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார் தலைமை தாங்கினார். புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட, ஒன்றிய, பகுதி, பேரூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்புவுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றனர்.

மாவட்ட கழக பொருளாளர் எம்.மூர்த்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ சதீஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு புதிய நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக பொருளாளர் எம்.மூர்த்தி, மாவட்ட கழக இணை செயலாளர் ரா.முனியம்மாள், துணை செயலாளர் வி.உமா விஜயகுமார், பகுதி கழக செயலாளர்கள் பி.ஜனார்த்தனன், பேரவை எ.ரவி, எஸ்.குப்புசாமி, எஸ்.நாகு, கே.அன்வர்பாஷா, வி.எஸ்.சொக்கலிங்கம், எம்.எ.ஜெய்சங்கர், ஒன்றிய கழக செயலாளர் எஸ்.சின்னதுரை, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.பி.ராகேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் மொய்தீன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் நித்தியானந்தம், பொதுக்குழு உறுப்பினர் சுகன்யா எ.தாஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் வி.எல்.ராஜன், நிர்வாகிகள் சுரேஷ், ராஜசேகர், பொருளாளர் திருமால், பூபதி, யுவராஜ், பாஸ்கர், விஷ்ணு, முருகானந்தம், பிரவின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.