திருவள்ளூர்

மீண்டும் தனி பெரும்பான்மையுடன் கழக ஆட்சி அமைய பாடுபடுவோம் – சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. சபதம்

திருவள்ளூர்

மீண்டும் தனி பெரும்பான்மையுடன் கழக ஆட்சி அமைய பாடுபடுவோம் என்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. சபதம் மேற்கொண்டார்.

திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றிய கழகம் சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் அருமந்தை ஊராட்சியில் உள்ள எஸ்.எஸ். மகாலில் நடைபெற்றது. ஒன்றிய கழக செயலாளர் பி.கார்மேகம் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்துக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தலைமை வகித்து பேசியதாவது:-

புதிய உறுப்பினர்கள் கழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி தனி பெரும்பான்மையுடன் கழக ஆட்சி மீண்டும் அமைய பாடுபட வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஏமாற்றி வெற்றி பெற்று விட்டனர்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் இதுவரை நன்றி சொல்ல தொகுதி பக்கமே வரவில்லை. ஆனால் நாங்கள் கிராமங்களுக்கே தேடிச் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். கழக அரசின் நலத்திட்டங்களை பெறாத வீடுகளே பொன்னேரி தொகுதியில் இல்லை. பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியத்தில் மட்டும் குடிமராமத்து திட்டம் மூலம் 27 ஏரி, 180 குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கார்மேகம், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை, மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.ராகேஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரகாஷ், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் நடராஜன், மாவட்ட பிரதிநிதி விச்சூர் செல்வம், அருமந்தை ஊராட்சி மன்ற தலைவர் விக்ரம், கிளை செயலாளர் விஜயகுமார், மாவட்ட மாணவரணி துணை தலைவர் ஸ்ரீதர், மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் இமான், காமேஷ், சூர்யா, தியான், சாந்தா, கொடி பாளையம் கிளை செயலாளர் மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.