சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

ராஜபாளையம் சாஸ்தாகோவில் நீர்தேக்கத்தில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

சென்னை

ராஜபாளையம் சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் 48 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டத்தில் உள்ள சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்திலிருந்து 5.11.2020 முதல் 22.12.2020 வரை 48 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டத்தில் உள்ள 3130.68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.