தற்போதைய செய்திகள்

முன்னாள் டி.ஜி.பி. கே.கோபாலகிருஷ்ணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

சென்னை

காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் கே.ராதாகிருஷ்ணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் கே. ராதாகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன்.

ராதாகிருஷ்ணன் சென்னை மாநகர காவல் ஆணையர், காவல் துறை தலைவர் மற்றும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் காவல் துறை இயக்குநர் போன்ற உயர்ந்த பதவிகளில் நியமனம் செய்யப்பட்டு, திறம்பட பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர். இவர் எழுத்தாளர், சமூக ஆர்வலர் போன்ற பன்முகத் தன்மை கொண்டவர்.

இவர் ராக்கி என்ற பெயரில் நகைச்சுவை கட்டுரை எழுதியவர்.ராதாகிருஷ்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.