சிறப்பு செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

கோவை

தொண்டாமுத்தூர் பேரூராட்சி பகுதிகளில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வழங்கினார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பேரூர், வேடபட்டி பேரூராட்சிகளில் உள்ள பேரூர், வேடபட்டி, நாகராஜபுரம் பகுதிகளில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கழக சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ, பொதுமக்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும், கபசுர குடிநீர், முகக் கவசம், மதிய உணவுகளை ஆகியவற்றை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து நாகராஜபுரத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தடுப்பூசி போட வரிசையில் நின்று கொண்டிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்ததோடு அங்குள்ள மருத்துவ அதிகாரிகளிடம், மருத்துவத்தேவைகள் குறித்தும், எவ்வளவு தடுப்பூசிகள் இன்று போடப்பட உள்ளது என்றும் கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் மதிய உணவை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட கழக நிர்வாகிகள் என்.கே.செல்வதுரை, என்.எஸ்.கருப்புசாமி, ஒன்றிய செயலாளர்கள் டிபி.வேலுச்சாமி, ராஜா என்கிற ராமமூர்த்தி, பேரூராட்சி செயலாளர்கள் கிருஷ்ணராஜ், ஜெகநாதன் மற்றும் வேணுகானம், வேடபட்டி கருணாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.