மதுரை

பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை அமைக்க இடம் தேர்வு – வி.வி.ராஜன் செல்லப்பா ஆய்வு

மதுரை

வலையங்குளத்தில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் உள்ள வலையங்குளத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைக்க அப்பகுதியை சேர்ந்த மக்கள் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து வலையங்குளம் ஊராட்சி மன்றம் சார்பில் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இடத்தை வி.வி.ராஜன் செல்லப்பா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் புனித ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அனைத்து சமுதாய மக்களின் காவலர்களாக திகழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது சான்றோர்கள், ஆன்றோர்கள், வரலாற்று சிறப்பு மிக்க தலைவர்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் தலைவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சிலை திறக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைக்க அந்த சமுதாய மக்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த இடத்தை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நிச்சயம் சிலை அமைக்க அரசு அனுமதி பெற்று தரப்படும். அம்மாவின் அரசு அனைத்து சமுதாய மக்களின் காக்கும் அரசு. எனவே வரும் தேர்தல் காலங்களில் அனைத்து சமுதாய மக்களும் இந்த அரசுக்கு நல் ஆதரவை வழங்குவார்கள்.

இவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் எம்.ரமேஷ், திருப்பங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட கழக துணை செயலாளர் முத்துகுமார், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கருத்த கண்ணன், ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.பெருமாள், கே.கே.பெருமாள், சோலைமலை மற்றும் வலையங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துப்பிள்ளை, துணைத்தலைவர் முத்துராமன், பாறைபத்தி ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா, துணைத்தலைவர் மலைச்சாமி, சோளங்குருணி ஊராட்சி மன்ற தலைவர் மணிராஜ், துணைத்தலைவர் இருளாண்டி, நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் வீரணன், துணைத்தலைவர் வெள்ளையம்மாள், நெடுமதுரை ஊராட்சி மன்ற தலைவர் விஜய தெய்வேந்திரன், துணைத்தலைவர் லிங்கம்மாள், எலியார்பத்தி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், துணைத்தலைவர் விஜயகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.