தற்போதைய செய்திகள்

கழகத்தின் வெற்றிக்கு இணைந்து பாடுபடுவோம் – புதிய நிர்வாகிகளுக்கு ஆர்.எஸ்.ராஜேஷ் வேண்டுகோள்

சென்னை

வரும் தேர்தலில் கழகத்தின் சாதனை வெற்றிக்கு இணைந்து பாடுபடுவோம் என்று புதிய நிர்வாகிகளுக்கு வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழகத்தின் சார்பில் ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டையில்
புதிதாக பொறுப்பேற்ற கழக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

2021 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இப்போழுதே ஆர்.கே.நகர் தொகுதி, மற்றும் பெரம்பூர் பகுதியில் இரவு பகல் பார்க்காமல் நிர்வாகிகள் வெற்றி ஒன்றே இலக்காக கொண்டு திறம்பட செயல்பட வேண்டும். இளைஞர், இளம்பெண்கள் சமுதாயம் வெற்றி பெற அவர்களை ஒன்றிணைத்து பாசறை மன்றங்களை விரிவுபடுத்த வேண்டும். அதற்காக பாக நிர்வாகிகளை கட்சியில் இணைத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தல் பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று தொகுதியில் பாகுபாடுகளை மறந்து வெற்றி இலக்கை எட்ட வேண்டும். அம்மா அவர்கள் கற்றுத்தந்த பாடத்தை உணர்ந்து இயக்கத்தை பலப்படுத்த கட்சி பணியாற்ற வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் கழகம் மகத்தான சாதனை படைக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசினார்.

இக்கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் ஆர்.நித்யானந்தம், எம்.என்.சீனிவாசபாலாஜி, என்.எம்.பாஸ்கரன், வியாசை இளங்கோவன், மாவட்ட நிர்வாகிகள் இ.எஸ்.சதீஷ்பாபு, எம்.கே.எஸ்.கலையரசன், கே.எஸ்.வீரமருது பாண்டியன், சி.டி.சிவா, கே.என்.கோபால், ஜெஸ்டின் பிரேம்குமார், மணல் ஜெ.ரவிச்சந்திரன், பி.ஜே.பாஸ்கர், அ.வேல்முருகன், கே.எஸ். ஹரிகிருஷ்ணன், பி.கே.யுவராஜ், ஆக்கம் அகஸ்டின், கே.செல்வராணி, டேனியல் சச்சின் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.