திருவள்ளூர்

200 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் – சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. வழங்கினார்

திருவள்ளூர்

மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைபெற்ற குறைகேட்பு முகாமில் 200 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் கொண்டகரை, வெள்ளிவாயல்சாவடி, சுப்பாரெட்டி பாளையம் ஆகிய ஊராட்சியில் மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மண்டல துணை வட்டாட்சியர் வாசுதேவன், வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

முகாமில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் 200 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

பொன்னேரி தொகுதியில் கழக அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தந்துள்ளது. பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், இளைஞர்களுக்கு தேவையான வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தந்துள்ளன. தார்சாலை,
கண்காணிப்பு கேமரா, குடி தண்ணீர் தொட்டி, பைப் லைன், உயர்மின் கோபுர விளக்கு, சிமெண்ட் சாலை, குளம் தூர்வாருதல், பள்ளிக் கட்டடம், புதிய ரேஷன் கடை என பல்வேறு நலத்திட்டங்களை கழக அரசு வழங்கி வருகிறது.

சென்னையில் நேற்று முன்தினம் முதலமைச்சர் நகரும் அம்மா உணவகம் மற்றும் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்துள்ளார். இன்னும் ஏராளமான திட்டங்களையும், உதவிகளையும் செய்ய அரசு காத்திருக்கிறது. எனவே கழக அரசுக்கு பொதுமக்களாகிய நீங்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. பேசினார்.