தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணைய நிர்வாகக்குழு கூட்டம் – ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

சென்னை

சென்னை அண்ணாநகர் நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையத்தில் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் நிர்வாகக்குழு கூட்டம் இணையத்தின் தலைவரும், வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆர்.எஸ். ராஜேஷ் பேசுகையில், கூட்டுறவு இணையத்தின் சார்பில் மல்டி டெக்னாலஜி அடிப்படையில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளுக்கு விரைவில் பூமி பூஜை நடைபெற உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இணையத்தின் மூலம் பட்டாசு சில்லறை விற்பனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் பட்டாசு பாக்கெட், இனிப்பு மற்றும் பரிசுகளை
வழங்கினார்.

இக்கூட்டத்தில் மேலாண்மை இயக்குநர் அமலதாஸ், துணைத்தலைவர் ஜெ.ராஜா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.