தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி – அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன்- கே.சி.கருப்பணன் பெருமிதம்

ஈரோடு

மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்று அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் பெருமிதத்துடன் கூறினர்.

ஈரோடு மாவட்டம், பவானியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பவானி நிலவள வங்கி வளாகத்தில் மாற்றுத் திறனாளி களுக்கான கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து 24 நபர்களுக்கு ரூ.15.75 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினர். முன்னதாக மாற்றுத் திறனாளி களிடம் கடனுதவிக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொண்ட அவர்கள் உடனடியாக இரண்டு நபர்களுக்கு ரூ.75 ஆயிரம் கடனுதவியை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வருகின்றனர். அவினாசி திட்டத்தின் மூலம் கொங்கு மண்டல பகுதி விவசாயிகளின் வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை வழங்கி வருவதில் அம்மா அரசு முன்னோடியாக விளங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.1500 வழங்கியவர் அம்மா. மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள், பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கான அடிப்படை வசதிகளையும், திட்டங்களையும் நிறைவேற்றுவதில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அம்மா அரசு உறுதியாக உள்ளது.

அம்மா அரசின் புதிய சிறப்பான திட்டங்களின் மூலம் தமிழகத்தில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. மனிதநேயத்தோடு மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். மக்களுக்கான திட்டங்களை வழங்கி வரும் அம்மா அரசிற்கு நீங்கள் என்றென்றும் நல்லாதரவை வழங்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் பேசினர்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன், பவானி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு, நம்பியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பி (எ) கே.ஏ.சுப்பிரமணியன், கழக பொதுக்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, பவானி நிலவள வங்கித் தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கே.கே.விஸ்வநாதன், பவானி யூனியன் சேர்மன் பூங்கோதை வரதராஜன், எம்.ஆர்.துரை, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சீனிவாசன், ஏ.ராஜேந்திரன், கராத்தே பெரியசாமி சிங்காரம், மாதேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஏ.பிரகாஷ், பிரபாகரன், சதீஸ்குமார், விறகு ஆறுமுகம், தனபால், தனசேகரன், குபேந்திரன், ராசு (எ) மோகனசுந்தரம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.