தற்போதைய செய்திகள்

வேதாரண்யத்தில் 744 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்திற்குட்பட்ட தோப்புத்துறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 744 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் ரூ.57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் பி.நாயர் தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிலமற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா தமிழக அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அனைத்து சமுதாய மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தினை ஏற்படுத்த பல சிறந்த திட்டங்களை செயல்படுத்தினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களது வழியில் தமிழக அரசு மக்களின் நலனில் முழுமையான அக்கறை கொண்டு, அவர்களது வாழ்வாதாரத்திற்காகவும், அவர்களது பாதுகாப்பினை உறுதி செய்யவும் தீவிரமாக முயற்சித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அத்தனை திட்டங்களையும் முதலமைச்சர் ஒன்றுவிடாமல் நிறைவேற்றி வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி, மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் ஆர்.கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பழனிகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், வட்டாட்சியர் முருகு உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.