தற்போதைய செய்திகள்

வடுகசாத்து கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை

ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

இந்த சிறப்பு மருத்துவ முகாம் செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 80 இடங்களில் நடைபெறுகிறது. இம்முகாமில் ரத்த அழுத்தம், பொது மருத்துவம், குழந்தைகள் நலம், தடுப்பூசி கிளினிக், மகளிர் நலம், மகப்பேறு மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, காதுமூக்கு தொண்டை, கண் சிகிச்சை, தோல் நோய், பல் மருத்துவம், சித்த வைத்தியம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் பல்வேறு சிகிச்சைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

இதன்பின்னர் அமைச்சர் பயனாளிகளுக்கு குழந்தைகள் நல பெட்டகங்களை வழங்கினார்.