தற்போதைய செய்திகள்

அயப்பாக்கத்தில் ரூ.3.43 கோடியில் 12 புதிய வளர்ச்சி திட்ட பணிகள் – அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்

திருவள்ளுர்

திருவள்ளுர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், அயப்பாக்கம் ஊராட்சி, அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையில் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 12 திட்டப்பணிகளை ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் அமைச்சர் பா.பென்ஜமின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் நடக்கும், முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், அயப்பாக்கம் ஊராட்சியில், பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியம் 9-வது வார்டில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.141 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அனைத்து வீடுகளுக்கும் குழாய் வசதியுடன் குடிநீர் இணைப்பு பணிகளையும், மாவட்ட ஊராட்சி நிதியின் கீழ் 8-வது வார்டில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் மின்விசை மோட்டார் பொருத்தப்பட்ட தரைமட்ட நீர்தேக்கத்தொட்டி முடிவுற்ற கட்டுமானப் பணிகளையும், 10-வது வார்டில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் டி.என்.எச்.பி பிரிவு-1 ரூ.8.04 லட்சம் மதிப்பீட்டில் ஃபேவர் பிளாக் சாலை முடிவுற்ற பணிகளையும், 10-வது வார்டில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் டி.என்.எச்.பி பிரிவு-2 ரூ.8.36 லட்சம் மதிப்பீட்டில் ஃபேவர் பிளாக் சாலை முடிவுற்ற பணிகளையும்,

3-வது வார்டு பகுதியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் ஃபேவர் பிளாக் சாலை முடிவுற்ற பணிகளையும், 11-வது வார்டில் மாநில நிதி குழு மான்யம் மற்றும் 14வது நிதி குழு மான்யம் திட்டத்தில் உள்ள கல்குளத்தில் ரூ.6.09 லட்சத்தில் முடிவுற்ற பணிகளையும், 11-வது வார்டில் 14-வது நிதி குழு மான்யம் திட்டத்தில் ஸ்ரீதேவி நகர் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற கட்டுமானப் பகுதிகளையும், 11-வது வார்டில் 8-வது தொகுப்பில் அபர்ணா நகர் பகுதியில் ரூ.129 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்தல் பணிகளையும்,

மாநில நிதி குழு மான்யம் மற்றும் 14வது நிதி குழு மான்யம் திட்டத்தில் 13-வது வார்டில் கச்சகுளம் பகுதியில் ரூ.5.86 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளையும், 13-வது வார்டு கூட்டுறவு நகர் பகுதியில் 14-வது நிதிக்குழு மான்யமத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற கட்டுமானப் பணிகளையும், எம்.எல்.ஏ.சி.டி.எஸ். திட்டத்தின் கீழ் 12-வது வார்டில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வண்ணான்குளப் பகுதியில் முடிவுற்ற கட்டுமானப் பணிகளையும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடுநிதி திட்டத்தின்கீழ் 12-வது வார்டில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் உயர் மின் கோபுரம் முடிவுற்ற பணிகளையும் ஆக மொத்தம் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற, 12 பணிகள் மக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் கூறினார்.

முன்னதாக கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, வருவாய்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, துப்புரவு பணியாளர்கள் மற்றும் டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர்களுக்கு அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிகளில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிரிஜா, அயப்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் துரைவீரமணி, ஆவடி வட்டாட்சியர் சங்கிலி ரதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.