தற்போதைய செய்திகள்

கயத்தார் மகாலட்சுமி நகரில் ரூ.32 லட்சத்தில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி தீவிரம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் ஆய்வு

தூத்துக்குடி

கயத்தார் மகாலட்சுமி நகரில் ரூ.32 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் கழுகுமலை பேரூராட்சி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் கயத்தார் பேரூராட்சி 15-வது வார்டு மகாலட்சுமி நகரில் பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஒப்பந்ததாரரிடம் நீண்ட காலம் நீடிக்கக்கூடிய வகையில் நல்ல முறையில் பேவர் பிளாக் சாலையும், மற்றும் கழிவுநீர் கால்வாய்களையும் அமைத்து கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா ராமச்சந்திரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, கழுகுமலை பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், உதவி செயற்பொறியாளர் மணிகண்டன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநரும், கழுகுமலை ஸ்ரீ முருகன் கூட்டுறவு வங்கி தலைவருமான கருப்பசாமி, கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் முத்தையா, நகர அம்மா பேரவை செயலாளர் மாரியப்பன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் மாரியப்பன், அவைத்தலைவர் காளிமுத்து, பொருளாளர் சுந்தரப்பன், எம்.ஜி.ஆர் இளைஞரணி கருப்பசாமி, ராமசுப்பு, மாரியப்பன், செந்தில்குமார், முருகன், கென்னடி, ராஜபாண்டி, செந்தூர் பாண்டியன், காமராஜ், டாக்டர் குருராஜ், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சிதம்பராபுரம் நீலகண்டன், ஒன்றிய மாணவரணி செயலாளர் நவநீத கிருஷ்ணன் மற்றும் பாலமுருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.