காஞ்சிபுரம்

தரப்பாக்கத்தில் கழகம் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி – கழக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி வழங்கினார்

காஞ்சிபுரம்

சென்னை புறநகர் மாவட்டம் குன்றத்தூர் கிழக்கு ஒன்றியம், தரப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக இலக்கிய அணி செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதி கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கழகத்தின் 49-வது ஆண்டு துவக்க விழாவையொட்டி சென்னை புறநகர் மாவட்டம் குன்றத்தூர் கிழக்கு ஒன்றியம், தரப்பாக்கம் ஊராட்சி கழகம் சார்பில் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.கந்தன் தலைமையில் குன்றத்தூர் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் டாக்டர் கே.பி.ஏசுபாதம் ஏற்பாட்டில் கல்வெட்டு திறப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தரப்பாக்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கழக இலக்கிய அணி செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதி கலந்து கொண்டு கழக கொடியை ஏற்றி வைத்தும், கல்வெட்டை திறந்து வைத்தும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆலந்தூர் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் வி.என்.பி.வெங்கட்ராமன், மாவட்டக் கழக துணைச் செயலாளர் அம்மன் பி.வைரமுத்து, ஆலந்தூர் மேற்கு பகுதிக் கழகச் செயலாளர் நந்தம்பாக்கம் எஸ்.ராஜசேகர், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் எம்.சுந்தரேசன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு இணைச் செயலாளர் அ.அப்துல்லா, மாவட்ட பிரதிநிதி எஸ்.வரதராஜன், கழக நிர்வாகிகள் கே.பி.சொக்கலிங்கம், ஜி.எம்.புஷ்பராஜ், கா.சிவராமன், எஸ்.பாண்டியன், ஜி.தங்கராஜ், எஸ்.சுந்தரமூர்த்தி, டி.இருசப்பன், மதுரை கண்மணி, டி.புனர்பூசம், கே.பிரபு, இ.மோகன்ராஜ், ஹேமலதா, சிவா, அஜித், தினேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கா.சிவராமன், சொ.சின்னராசு ஆகியோர் நன்றி கூறினர்.