தற்போதைய செய்திகள்

தமிழ்மண் இருக்கும் வரை கழகத்தை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது – வி.பி.பி.பரமசிவம் முழக்கம்

கோவை

எதிரிகளே வியக்கும் வகையில் அசூர வளர்ச்சி அடைந்துள்ள கழகத்தை தமிழ் மண் இருக்கும் வரை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது என்று இளைஞர், இளம்ெபண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கூறினார்.

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி கிணத்துக்கடவு மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் கோவில்பாளையத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தார். கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.ேவலுமணி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

இக்கூட்டத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ பேசியதாவது:-

வரலாற்று சிறப்பு மிக்க இக்கூட்டம் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளது. இன்றைய கூட்டம் 2021-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கழக கூட்டணி வெற்றி பெறும் என்பதற்கு அச்சாரமாக அமைந்துள்ளது. மாநாடு போல கூடியுள்ள இந்த கூட்டம் எதிரிகளை அச்சப்பட வைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கொள்கை இல்லாத திமுக இளைஞர்களை இழுக்க முயற்சி செய்கிறது. நடிகர்கள் நாடாள வேண்டும் என்றால் ஒன்று புரட்சித் தலைவராக இருக்க வேண்டும். அல்லது புரட்சித் தலைவியாக இருக்க வேண்டும். அப்போதுதான் இளைஞர்கள் உங்கள் பின்னால் வந்து இருப்பார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மக்களுக்கான திட்டங்களை தந்து சிறப்பான முறையில் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள். மிகச்சிறந்த ஜனநாயகம் உள்ள இயக்கத்தை இங்கே கூடியுள்ள இளைஞர்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். கழகம் என்னும் இந்த ஜனநாயக இயக்கத்தில் உள்ளவர்கள் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் வருங்காலங்களில் உயர முடியும். அதனால் தான் உங்களது தேர்வு சரி என்று சொல்கிறேன். உண்மையாக உழைப்பவர்களுக்கு கழகத்தில் நிச்சயம் உயர்வு உண்டு.

ஆனால் திமுகவில் என்ன நடக்கும். தலைமை பதவிகளில் இருப்பவர்களுக்கு பிறகு அவர்களது மகன்கள், அதன் பிறகு பேரன், அவர்களது கொள்ளுப்பேரன் என்று அவர்கள் குடும்பம் மட்டுமே உயர் பதவியில் இருப்பார்கள். ஆனால் கழகம் தொண்டர்களையே வாரிசாக கொண்டு இயங்கி வருகிறது. கழக தொண்டர்கள் கூட்டமே அம்மாவின் கனவை நிறைவேற்றும். எதிரிகளே அச்சப்படும் வகையில் இந்த இளைஞர் இளம்பெண்கள் பாசறை கூட்டம் திரண்டுள்ளது. இன்னும் 100 ஆண்டுகள் மட்டுமல்ல தமிழ் மண் உள்ளவரை கழகத்தை யாராலும் வெல்ல முடியாது.
இவ்வாறு இளைஞர் மற்றும் இளமெ்பண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ.
பேசினார்.