தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் பட்டினி சாவு கிடையாது – மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பேச்சு

மதுரை

கழக அரசின் திட்டங்களால் தமிழகத்தில் பட்டினி சாவு கிடையாது என்று மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் அவனியாபுரம் மேற்குப்பகுதி 60-வது வட்ட பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. தொகுதி கழக செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட கழக துணை செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பகுதி செயலாளர் ராமமூர்த்தி, பகுதி துணை செயலாளர் செல்வகுமார், வட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, எம்.ஜி.ஆர். மன்ற கொம்பையா கல்லுமடை முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா பேசியதாவது:- 

தாலிக்கு தங்கம் மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் புரட்சித்தலைவி அம்மாமக்கள் மனதில் என்றும் நீங்காத ஒரு இடத்தை பிடித்துவிட்டார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அரசு பலகாலமாக தூர்வாரப்படாத நகர் மற்றும் கிராமங்களில் உள்ள கண்மாய்கள் ஊரணிகள் குடிமராமத்து பணி செய்து விவசாய மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டனர்.

தொடர்ந்து அம்மாவின் கனவான மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரிகள் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை தந்து மேலும் நிர்வாக வசதிக்காக 5 புதிய மாவட்டங்களை உருவாக்கித் தந்துள்ளார்.
அம்மாவின் கனவு திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு கொண்டு சேர்த்த பெருமை முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு சேரும் இதுபோன்ற திட்டங்களை மக்களிடம் நாம் கூறும் பட்சத்தில் அவர்கள் அதிமுக விற்கு வாக்களிக்க தயங்கமாட்டார்கள்.

பூத் கமிட்டி நிர்வாகிகள் 50 வாக்காளருக்கு ஒருவர் வீதம் தேர்தல் பணியாற்ற வேண்டும் வாக்காளர்கள் அனைவரும் தமிழக அரசின் ஏதாவது ஒரு திட்டத்தின் மூலம் பயன் அடைந்திருப்பார்கள் இதனால் அவர்களிடம் வாக்கு சேகரிப்பது நமக்கு மிக எளிதான ஒரு விஷயமாக இருக்கும்.

மேலும் நியாய விலை கடைகளில் விலை இல்லாமல் அரிசி தந்து தமிழகத்தில் பட்டினிச்சாவு இல்லாத ஒரு நிலையை அம்மா உருவாக்கி தந்துள்ளார் பெண்களுக்கான ஏராளமான திட்டங்களை தந்துள்ளார். இதுபோன்ற திட்டங்களை நாள்தோறும் நீங்கள் அவர்களிடம் நினைவுபடுத்தும் பட்சத்தில் அந்த ஐம்பது வாக்குகளையும் நீங்கள் மிக எளிதில் பெற்றுவிடலாம் திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தவரை கழகம் சார்பில் நிற்கும் வேட்பாளரை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதே நமது நோக்கமாக நாம் செயல்பட வேண்டும்.

இவ்வாறு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா பேசினார்.