சிறப்பு செய்திகள்

தன்னம்பிக்கை – மன உறுதியுடன் சவால்களை எதிர்கொண்டால் உலகம் உங்கள் கையில் – மாணவர்களுக்கு துணை முதலைமைச்சர் அறிவுரை

சென்னை

தன்னம்பிக்கை, மன உறுதியுடன் சவால்களை எதிர்கொண்டால் உலகமே உங்கள் கையில் என்று மாணவர்களுக்கு துணை முதலைமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது.

உலகை இயக்கும் உந்துசக்தியான மாணவர்களுக்கு எனது இதயப்பூர்வமான சர்வதேச மாணவர்கள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாளைய வரலாற்றை படைக்கவிருக்கும் அன்பிற்குரிய மாணவச்செல்வங்களே, மனதில் உறுதியோடும், தன்னம்பிக்கை யோடும் சவால்களை எதிர்கொள்ளுங்கள். உலகம் உங்கள் கையில்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.