சிறப்பு செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் சாமி தரிசனம்

திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று (16-ந்தேதி) மாலை தனது குடுப்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றார். சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக ஆந்திர பிரதேசம் மாநிலத்துக்கு புறப்பட்டார்.

அவர் திருப்பதியை மாலை 4 மணிக்கு சென்றடைந்தார். அங்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு வராக சுவாமி கோவிலிலும், ஹயக்ரீவர் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார். திருப்பதியில் இரவு அவர் தங்கினார்.

காலை (17-ந்தேதி) திருப்பதி தேவஸ்தானத்துக்கு சென்றார். அதிகாலையில் நடைபெற்ற வாராந்திர சேவையான அஷ்டதள பாத பத்ம ஆராதனையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

அப்போது திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர் ரெட்டி, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பொன்னாடை அணிவித்து பிரசாதம் வழங்கினார். சாமி தரிசனத்திற்கு பிறகு அங்கிருந்து சாலை மார்க்கமாக முதலமைச்சர் நேற்று சென்னைக்கு வந்தடைந்தார்.