தற்போதைய செய்திகள் திருவண்ணாமலை

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்பு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும், மாவட்ட ஆவின் தலைவரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. செங்கம், கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலை, போளூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள கழக நிர்வாகிகள் புதிய வாக்காளர் பட்டியலை மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கி பேசியதாவது:-

வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் செய்யும் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தோரின் பெயர்களை தற்போதுள்ள வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்வதற்கும் வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை சரி செய்வதற்கும்,தேவையான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அதனை சம்பந்தப்பட்ட முகாம்களில் வழங்கி இப்பணியை முடிந்ததை செய்து முடித்திட வேண்டும்.

இப்பணிகளில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மண்டல பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கிளை, வட்ட கழக நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் அனைவரும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் தனி கவனம் செலுத்தி ஈடுபட வேண்டும். வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைய அனைவரும் அயராது பாடுபட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

இக்கூட்டத்தில் கழக மாநில மகளிர் அணி துணை செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெயசுதா லட்சுமிகாந்தன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் டிஸ்கோ குணசேகரன், மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாசலம், திருவண்ணாமலை நகர கழக செயலாளர் , செல்வம், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நைனா கண்ணு, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் சுனில் குமார், மாவட்ட கலை பிரிவு செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அகிலா கோவிந்தன் உள்பட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.