தற்போதைய செய்திகள்

திருப்பதி கோயிலில் நடந்தே சென்று சாமி கும்பிட்டார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை

தமிழக வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கடவுள் பக்தி அதிகம். இவர் வருடத்தின் பெரும்பாலான நாட்கள் விரதமிருந்து கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். குறிப்பாக சபரிமலை, திருப்பதி, திருச்செந்தூர் போன்ற கோயில்களுக்கு அடிக்கடி செல்வார்.

இந்நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கீழ் திருப்பதியில் இருந்து படிக்கட்டு வழியாக நடந்தே சென்று அவர் ஏழுமலையானை தரிசித்தார். அங்கு நடந்த அங்கு நடந்த சிறப்பு பூஜையில் தமிழகத்தில் கழக ஆட்சி அமைய வேண்டி பிரார்த்தனை மேற்கொண்டார்.

முன்னதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சருடன் அவரதுஅவரது உதவியாளரும் பாதுகாவலர் மட்டுமே சென்று இருந்தனர்.