சிறப்பு செய்திகள் தமிழகம்

சேலம் வனவாசியில் ரூ.118.93 கோடியில் 44 புதிய திட்டப் பணிகள் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

சேலம்

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், வனவாசியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:-

சேலம் மாவட்டம், வனவாசியில் இயங்கி வரும் பல்வகை தொழில் நுட்பக் கல்லூரிக்கு கூடுதல் கட்டடம் வேண்டுமென்று கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், சுமார் ரூபாய் 9 கோடி மதிப்பீட்டில் புதிதாக மாணவ, மாணவியர் தங்கும் விடுதிக் கட்டடம் கட்டி இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது.

இந்தப்பகுதி ஒரு பின்தங்கிய பகுதி. ஏழை, எளிய மக்கள் நிறைந்த பகுதி. ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில இந்தப் பகுதியிலிருந்து வெளியே சென்று கல்வி கற்க அதிகமான பொருளாதாரம் தேவைப்படும். எனவே, நான் 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் போது, மக்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, இப்பகுதியில் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி திறக்கப்பட்டு மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். அதேபோல, மாணவர்கள் இங்கேயே தங்கி படிக்க

விடுதி வேண்டுமென்ற கோரிக்கையும் இன்றையதினம் (நேற்று) அம்மாவின் அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வனவாசி அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி 27.7.2018 அன்று புதிதாக துவங்கப்பட்டு, இக்கல்லூரிக்கு ஏற்கனவே ரூபாய் 23 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதில்

677 மாணவர்களும், 150 மாணவியர்களும், என மொத்தம் 827 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.மேலும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பல்வேறு முடிவுற்ற பணிகள் இன்றைக்கு திறக்கப்பட்டுள்ளன. நீர்வள ஆதாரத் துறையின் சார்பில் ரூபாய் 9 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற ஏரிகள் புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்பு பணிகளும்,காவல் துறையின் சார்பில் ரூபாய் 1 கோடியே 32 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கொங்கணாபுரம் ஊரக காவல் நிலைய கட்டடம் மற்றும் ஆத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகக் கட்டடமும்,

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ரூபாய் 2 கோடியே 2 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பீட்டில் சங்ககிரி வட்டம், சின்னப்பிள்ளையூர் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஜலகண்டாபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கலை மற்றும் கைத்தொழில் அறை கூடம் மற்றும் சுற்றுச் சுவர் பணிகளும்,

நூலகத் துறையின் சார்பில் ரூபாய் 34 லட்சம் மதிப்பீட்டில் சேலம் மாவட்ட மைய நூலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு நூலகக் கட்டடமும்,கூட்டுறவுத் துறையின் சார்பில் ரூபாய் 5 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் புதிய ஆய்வுக் கூட்டரங்கம் மற்றும் சமுதாயக் கூடம் புனரமைத்து நவீனமயமாக்கும் பணிகள், செட்டிமாங்குறிச்சி, மொத்தயனூர், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய 3 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான புதிய அலுவலக கட்டடங்கள் மற்றும் சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் பிழியும் ஆலை ஆகிய 7 முடிவுற்ற பணிகளும்,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் ரூபாய் 51 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பீட்டில் எடப்பாடி கோட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வருவாய் பிரிவு அலுவலக கட்டடமும்,எடப்பாடி வட்டம், ஆடையூரில் ரூபாய் 19 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையமும், கே.ஆர் தோப்பூரில் ரூபாய் 15 கோடியே 62 லட்சத்து 1 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையமும்,பேரூராட்சிகள் துறையின் சார்பில் பொது நிதி திட்டத்தின் கீழ், செந்தாரப்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு ரூபாய் 49 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இருப்பு அறை மற்றும் சுற்றுச் சுவருடன் கூடிய பேரூராட்சி அலுவலக புதிய கட்டடமும்,எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பூலாம்பட்டி பேரூராட்சியில் ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் பழுதடைந்த 42 தொகுப்பு வீடுகள் புனரமைக்கப்பட்டுள்ள பணிகளும்,

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் எடப்பாடி, கொங்கணாபுரம் ஒன்றியங்களுக்குட்பட்ட முறையாக குடிநீர் கிடைக்கப்பெறாத 137 குடியிருப்புகளுக்கு மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ், ரூபாய் 23 கோடியே 58 இலட்சம் மதிப்பீட்டில் இராசிபுரம்-எடப்பாடி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கும் பணிகளும், ஒப்படைக்கப் பட்ட வருவாய் இனங்கள் திட்டத்தின் கீழ் ரூபாய் 2 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடமும்,எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே 1 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற 11 பணிகளும்,நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் (என்.சந்திரசேகரன்) நிதியிலிருந்து உள்ளூர் பகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 99 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற 10 பணிகளும்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ்,

ரூபாய் 50 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டில் கோணசமுத்திரம், அரசநத்தம், சாணாரப்பட்டி ஆகிய 3 ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டடங்கள் மற்றும் ரூபாய் 60 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 புதிய அங்கன்வாடி மைய கட்டடங்களும்,மூலதன மான்ய நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம், கரட்டூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மற்றும் சாணாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய 2 பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடங்களும்,மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ், ரூபாய் 66 லட்சம் மதிப்பீட்டில் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம்,

சின்னகல்ராயன் வடக்குநாடு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆகிய 2 பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடங்களும்,வேளாண்மை துறையின் சார்பில் மகுடஞ்சாவடியில் ரூபாய் 1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டடமும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் ஆத்தூரில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டடமும்,

கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ், ரூபாய் 3 கோடியே 2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் வீரபாண்டி, காருவள்ளி, கொளத்தூர், சின்னக்கோனூர், காட்டுக்கோட்டை, ஜலகண்டாபுரம், முளுவி மற்றும் செம்மநத்தம் ஆகிய 8 இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனை கட்டடம் மற்றும் கால்நடை மருந்தக கட்டடங்களும்,

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் சார்பில் ரூபாய் 9 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடம், ஓமலூர் அரசு மருத்துவமனையில் இரண்டாம் நிலை வசதியுடன் கூடிய கூடுதல் கட்டடம், மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உயர் கலப்பின சார்பு மையக் கட்டடம், கொளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு கட்டடம் மற்றும் கரியகோவில் புதிய துணை சுகாதார நிலைய கட்டடம் உள்ளிட்ட 5 முடிவுற்ற பணிகளும்,

வருவாய்த் துறையின் சார்பில் ரூபாய் 40 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டில் ஏற்காடு மற்றும் எடப்பாடியில் குறுவட்ட அளவையர்களுக்கான குடியிருப்புடன் கூடிய 2 புதிய அலுவலக கட்டடங்களும்,பதிவுத் துறையின் சார்பில் ரூபாய் 2 கோடியே 76 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டடங்களும்,பால்வளத் துறையின் சேலம் ஆவின் சார்பில் ரூபாய் 94 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில் சேலம் பால் பதன ஆலையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி தயிர் பதப்படுத்துதல் மற்றும் தயிரை கப்புகளில் நிரப்பும் இயந்திரம் மற்றும் சங்ககிரி வட்டம், தேவூரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கான புதிய அலுவலக கட்டடமும்,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில் ரூபாய் 10 கோடியே 56 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கல்வராயன்மலை, கருமந்துறை, பகடுபட்டு, கரியக்கோயில்வளவு, அருநூத்துமலை, பச்சமலை வேப்படி, குன்னூர், பச்சமலை கொடுங்கல் ஆகிய இடங்களில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், கழிவறைகள், பணியாளர் குடியிருப்புகள், சுற்றுச் சுவர், குடிநீர் வசதியுடன் உணவருந்தும் அறை, சமையலறை கட்டடங்கள் உள்ளிட்ட 9 முடிவுற்ற பணிகளும் என மொத்தம் இன்றைய தினம் இந்த விழாவின் மூலம் ரூபாய் 123 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 86 திட்டப் பணிகள் என்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல நீர் வள ஆதாரத் துறையின் சார்பாக 100 ஏரிகளில் நீர் நிரப்புவதற்கான பல்வேறு பணிகளுக்காக ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆனால், இப்பொழுது, ஏரிகளை தூர்வார வேண்டுமென்று விவசாயிகளிடம் இருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று அம்மாவின் அரசு மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி என 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஏரிகளை ரூபாய் 44 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளுக்கும், இரண்டு தடுப்பணைகள் கட்டும் பணிக்கும் இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சேலம் மாநகராட்சி சார்பில், சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ், ரூபாய் 63 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் 7 புதிய திட்டப் பணிகளுக்கு இன்றைய தினம் ( நேற்று) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பேரூராட்சித் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. வருவாய்த்துறை, பால்வளத் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில், என மொத்தம் ரூபாய் 118 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 44 புதிய திட்டப் பணிகளுக்கு இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று மகிழ்ச்சியான செய்தி இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.