தற்போதைய செய்திகள்

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் தி.மு.க. நாடகம் – முதலமைச்சர் பேச்சு

சேலம்

நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ்,திமுக கூட்டணி ஆனால் முழு பூசணிக்காயையை சோற்றில் மறைப்பது போல எதிர்கட்சியினர் பேசுகின்றனர் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், வனவாசியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது.

சில அரசியல் கட்சித் தலைவர்கள் நீட் தேர்வு, நீட் தேர்வு என்று எப்பொழுது பார்த்தாலும் குரல் கொடுக்கின்றார்கள். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களும் அதே கேள்வியைத்தான் கேட்கிறார்கள். ஆனால், கேட்க வேண்டிய இடத்தில் கேட்பதில்லை. கேட்க வேண்டிய இடத்தில் கேட்டால் தானே சரியான பதில் கிடைக்கும். ஏனென்றால், நீட் தேர்வை கொண்டு வந்தது யார்? மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, திமுக அந்த ஆட்சியில் அங்கம் வகித்தது. அந்த காலக்கட்டத்தில் தான் நீட் தேர்வை கொண்டு வந்தார்கள். ஆனால், முழு பூசணிக்காயையை சோற்றில் மறைப்பது போல எதிர்கட்சியினர் பேசுகின்றனர்.

இவர்கள் கொண்டுவந்த நீட் தேர்வை நாங்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தோம், சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தோம். இருந்தாலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நீட் தேர்வை நாம் அமல்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், நீட் தேர்வை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.