தற்போதைய செய்திகள்

கோவில்பட்டியில் ரூ.2.60 கோடியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டித் தரவேண்டும் என்று பொதுமக்கள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து அமைச்சரின் பரிந்துரையில் பேரில் கோவில்பட்டியில் ரூ.2. கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்ட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணையிட்டார்.

அதன்பேரில் தற்போது கட்டி முடிக்கப்பட்ட புதிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், பொதுப்பணித்துறை கட்டடப் பொறியாளர் கங்கா பரமேஸ்வரி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அருள்நெறி செல்வன்,போக்குவரத்து ஆய்வாளர் நாசர் கனி, இளநிலை உதவியாளர்கள் நேவிஸ், விஜயகுமார் டைப்பிஸ்ட் சக்தி, வள்ளி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் நீலகண்டன், மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் விஜயராஜ், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் சுதா சுப்புராஜ், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் செல்வகுமார், கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன் கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜ், கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, கயத்தார் கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்