தற்போதைய செய்திகள்

11 கிளை கழகங்களுக்கு தலா ரூ.5000 நிதி உதவி – மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் சட்டமன்ற தொகுதியில் உள்ள 641 கிளைகளுக்கு தலா 5000 ரூபாய் மாவட்ட செயலாளார் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வழங்கி வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதியில் செய்யாறு நகராட்சி 27 கிளைகள் உள்ளது, செய்யார் வடக்கு ஒன்றியம் 104 கிளைகளும், செய்யாறு தெற்கு ஒன்றியம் 120 கிளைகளும், அனக்காவூர் கிழக்கு ஒன்றியம் 78 கிளைகளும், அனக்காவூர் மேற்கு ஒன்றியம் 80 கிளைகளும், வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம் 107 கிளைகளும், வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் 105 கிளைகளும், ஆகமொத்தம் 641 கிளைகள் உள்ளன. மேற்கண்ட அனைத்து கிளைகளுக்கும் தலா 5000ரூபாய் வீதம் கடந்த 2 மாதகாலமாக தொடர்ந்து மாவட்ட கழகசெயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வழங்கி வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஆக்கூர் கிராமத்தில் 4கிளைகளுக்கு, கீழ்நேத்தப்பாக்கம் கிராமத்தில் 3 கிளைகளுக்கும், மடிப்பாக்கம் கிராமத்தில் 4 கிளைகளுக்கு ஆக மொத்தம் 11 கிளைகளுக்கு 5 ஆயிரம ரூபாய் தனது சொந்த பணத்திலிருந்து மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.மேலும் மேற்கண்ட 11 கிளைகளிலும் கழககொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது கொடியேற்றும் நிகழ்ச்சியில் அப்பகுதியிலிருது ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

முன்னதாக அனக்காவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.துரை, வரவேற்றார்.

இந்நிகழ்ச்சிகளில் செய்யாறு வடக்கு ஒன்றிய செயலாளர்கள் எம்.மகேந்திரன், மாவட்ட துணை செயலாளர் டி.பி.துரை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பி.ஜாகிர்உசேன். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எ.விஜய், மாவட்ட அம்மா பேரவை துணைசெயலாளர் கன்னியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.