தற்போதைய செய்திகள்

நாட்டிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி கழகம் – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பெருமிதம்

சென்னை

நாட்டிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி கழகம் என்று மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் கூறினார்.

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் பெரம்பூர் பகுதிக்குட்பட்ட வியாசர்பாடி 45-வது மேற்கு வட்டம் பி.வி.காலனியில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மன்றம் திறப்பு விழா பகுதி செயலாளர் வியாசை எம்.இளங்கோவன், முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், கலந்து கொண்டு மன்ற பெயர் பலகையை திறந்து வைத்தும், கழக கொடியை ஏற்றி வைத்தும் இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், பேசியதாவது;-

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட ஆர்.கே.நகர் பகுதியில் காசிமேடு, தண்டையார் நகர், தேசிய நகர், புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகர், சிவன் நகர், நேதாஜி நகர், பட்டேல் நகர், சுனாமி குடியிருப்பு பகுதி, வ.உ.சி.நகர், சேனியம்மன் திலகர் நகர், அம்மணியம்மாள் தோட்டம், திருநாவுக்கரசு தோட்டம், இளையமுதலி தெரு, கொருக்குப்பேட்டை, சிகிரந்த பாளையம், சத்தியமூர்த்தி நகர், அண்ணாநகர், ஜெ.ஜெ நகர், எழில் நகர், மற்றும் பெரம்பூர் பகுதியில் பி.வி.காலனி, எஸ்.ஏ.காலனி, கொடுங்கையூர், உள்ளிட்ட பல்வேறு பாக பகுதிகளில் தலா 28பேர் குழுக்களை கொண்டு தொடங்கப்பட்ட 60 பாசறை மன்றங்கள் மூலம் இதுவரை 1680 பாக நிர்வாகிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாசறை குழுக்களை உருவாக்க காரணம் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று தருவது, முதியோர் உதவி தொகை, பெண்கள் திருமண உதவி பெறுதல், ஸ்கூட்டி திட்டம், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சமூக விரோத செயல்களை தடுத்தல், குடிநீர், மற்றும் கழிவுநீர் பிரச்சினைகளை தீர்த்து வைத்தல் உள்ளிட்ட பணிகளில் பாக பாசறை நிர்வாகிகள் தீவிர கவனம் செலுத்தி மக்கள் பணிகளில் சிறப்பாக திகழ வேண்டும்.

இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட மாநில கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் தான். முதன்மையான கட்சியும் கூட. அம்மாவின் அரசு எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி மக்கள் முன்னேற்ற பாதைக்கு செல்ல வழிவகுத்து கொடுத்துள்ளது. இதற்கு காரணம் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தான். அவர்களின் எண்ணற்ற தியாகங்களால் இன்று கழகத்திற்கு தமிழக மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். அதேப்போன்று பாசறை நிர்வாகிகள் பொதுமக்களிடம் தங்களை அடையாளப்படுத்தி கொண்டு சிறப்பாக செயல்பட்டு கழக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் வியாசை எம்.இளங்கோவன், என்.எம்.பாஸ்கரன், ஆர்.நித்தியானந்தம், எம்.என்.சீனிவாசபாலாஜி, டி.ஒய்.கே.செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், ஜெஸ்டின் என்.பிரேம்குமார், இ.எஸ்.சதீஷ்பாபு, வட்ட செயலாளர்கள் வி.பொன்முடி, மணல் ஜெ.ரவிச்சந்திரன், லயன் ஜி.குமார், வி.கோபிநாத், மகேந்திரமணி, ஏ.எஸ்.ஹரிகிருஷ்ணன், எம்.கே.எஸ்.கலையரசன், ஆர்.சுதர்சன், உதயம் சீனிவாசன், எஸ்.கே.அமுதா, கே.செல்வராணி, காயத்ரி தேவி, டேனியல் சச்சின் மணி, வி.எம்.மதன், ஜெம்ஸ், ராம்குமார் (எ) சுங்கான், கோச் ராஜேஷ், கே.மகேஷ். மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.