தற்போதைய செய்திகள்

நிவர் புயலிலும் அரசியல் ஆதாயம் தேட ஸ்டாலின் முயற்சி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

மதுரை

நிவர் புயலிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டத்தை தெரிவித்துள்ளார்.

மதுரையில் கழக அம்மா பேரவை யின் சார்பில் கொரோனா நோய் தொற்றார்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து உணவு கூடத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் அருளாசியுடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி 147 நாட்களைக் கடந்து உணவே மருந்தாக அம்மா கிச்சன் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் தற்போது நிவர்புயல் தாக்குதலால் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்படாவண்ணம் முதலமைச்சர் புயலை காட்டிலும் அதிதீவிரபோர்க்கால நடவடிக்கை எடுத்தார்.

புயல் கரையை கடந்த உடன் பாதிப்படைந்த கடலூர் மாவட்டத்திற்குகடந்த 26-ந்தேதி நேரடியாக சென்று வாழை தோப்புகளை பார்வையிட்டு, அதன் தொடர்ச்சியாக துறைமுகப்பகுதி, மீனவர்கள்பகுதி அதேபோல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடத்தில் மனுக்கள் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழகம் முழுவதும் பாதிப்புகள் குறித்து கண்டறிந்து கணக்கு எடுக்கப்பட்ட உடன் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உரிய நிவாரணம் வழங்கப்படும் பயிர் இன்சூரன்ஸ் செய்திருந்த விவசாயிகளுக்கு அந்த தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

அதேபோல் துணைமுதலமைச்சரும் சென்னை வேளச்சேரி, தரமணி, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இன்றைக்கு பல்வேறு ஊடங்கள் கூட முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால் உயிர் சேதமும் ஏற்படவில்லை அதேபோல்
பொருள் சேதம் குறைவாக உள்ளது என்று பாராட்டியிருந்தனர். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சரும் தமிழகத்தின் நிலவரங்களை கேட்டறிந்து தேவையான உதவிகள் செய்யப்படும் என்று கூறி தமிழகத்தின் செயல்பாட்டினை பாராட்டினார்.

இதையெல்லாம் தெரிந்த ஸ்டாலின் நிவர் புயலிலும் கூட அரசியல் செய்ய நினைக்கிறார் கொளத்தூர், வில்லிவாக்கம் உட்பட 11 சட்டமன்ற தொகுதிகளில் உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளேன் என்று ஸ்டாலின் பெருமையாக கூறி அரசை பற்றி குறை கூறுகிறார்.

ஆனால் இன்றைக்கு 15 மாவட்டங்களில் நிவர் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளைக் கண்டறிந்து மக்களைப் பாதுகாக்கும் வண்ணம் 2,25,398 நபர்களை 3,042நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டு அங்கு அவர்கள் தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு மட்டுமல்லாது மேலும் 850 நிரந்தர மருத்துவ முகாம்களும், 224 நடமாடும் மருத்துவ முகாம் மூலம் இதுவரை 73,000 மேற்பட்டோர் மருத்துவ முகாமில் பயன்பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 4,133 தாழ்வானபகுதிகளை கண்டறியப்பட்டு தண்ணீர் தேங்கினால் உடனுக்குடன் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன மழை பெய்யும்போது மழை நீர் தேங்கிமழை விட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்குள் வடிந்து விடக்கூடிய நிலையை தற்பொழுது ஏற்படுத்தியுள்ளோம் கடந்த திமுக ஆட்சி காலத்தில் எல்லாம் மழைநீர் சூழ்ந்ததால் அது வெளியேற்றவே ஏறத்தாழ ஆறு மணி நேரம் ஆகும் என்பது ஸ்டாலின் நன்றாக தெரியும் தொடர்ந்து முதலமைச்சர் களநிலவரங்களை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் கேட்டறிந்து உடனுக்குடன் உரிய வழிகாட்டுதலை வழங்கினார்.

அதுமட்டுமல்லாது கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் 100 சென்டிமீட்டர் மழை பெய்தது ஆனால் புரட்சித்தலைவி அம்மா தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று அதனை ஆய்வு செய்து போர்க்கால நடவடிக்கை எடுத்தார்.

கஜா புயல், தானே புயல், ஓகி புயல் இதற்கெல்லாம் மேலாக சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் எல்லாம் அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு மக்களை காப்பாற்றியது இன்றைக்கு அம்மாவின் வழியில் மக்களை காப்பாற்றுவதில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது என்று பல்வேறு மாநிலங்கள் பாராட்டி வருகின்றன குறிப்பாக இந்த நிவர் புயலிலும் முதலமைச்சர் எடுத்த தீவிர நடவடிக்கையால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை மக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினர் இதன் மூலம் இயற்கை கையாளுவதில ஒரு புதிய இலக்கணத்தை முதலமைச்சர் படைத்துள்ளார் என்று தமிழக மக்களே முதலமைச்சர் பாராட்டுகின்றனர்.

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகஆறுதல் கூறி வருகின்றனர். இதில் முதலமைச்சர் தமிழகம் முழுவதும் பாதிப்பு கணக்கு எடுக்கப்பட்ட உடன் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணங்கள் வழங்கப்படும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆனால் ஸ்டாலின் அரசின் போர்க்கால நடவடிக்கைகளை தெரிந்துகொண்டே மனசாட்சி இல்லாமல் இதில் கூட அரசியல் செய்யவேண்டும் என்று நினைக்கிறார். புயலிலும் மக்கள் நலனை எண்ணிப் பாராமல் அரசியல் செய்ய நினைத்தால் ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள்.

முதலமைச்சர் வழிகாட்டுதல்படி உள்ளாட்சித் துறை, மின்சாரத்துறை, பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, வனத்துறை,உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்ந்து இரவு பகல் பாராது பணியாற்றியதால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விரைவிலேயே இயல்பு நிலை திரும்பி உள்ளது ஆகவே மக்களைக் காப்பதில் அம்மா அரசுக்கு நிகர் எந்த அரசும் கிடையாது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் பாரத பிரதமர் பாராட்டைப் பெற்று ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டு மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று கூறியது போல் தற்போது கடும் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களையும், அதிகப் பொருள் சேதங்கள் இல்லாமல் காப்பது எப்படி என்று அனைத்து மாநிலங்களும் வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.