சிறப்பு செய்திகள்

பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவிப்பு – உச்சநீதிமன்றத்திற்கு துணை முதல்வர் நன்றி

சென்னை

உச்சநீதிமன்றத்திற்கு உலகத்தமிழர்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அனைத்து தரப்பு மக்களும் புத்தாடை அணித்து பொங்கலோ பொங்கல் என்று இயற்கை அன்னையை அன்புடன் வரவேற்பார்கள். இந்த பண்டிகைக்கு தற்போது உச்சநீதிமன்றமும் விடுமுறை அளித்துள்ளது.

இதுகுறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளன்று உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளித்து, தைத்திருநாளின் சிறப்பினை தேசமறியச் செய்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்பதுடன், உச்சநீதிமன்றத்திற்கு உலகத்தமிழர்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் கூறியுள்ளார்.