தற்போதைய செய்திகள்

மதுரை மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்காது – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு

மதுரை

மதுரை மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்காது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் செல்லூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

மதுரை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை அம்மாவின் வழியில் முதலமைச்சர் வழங்கி உள்ளார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார்.தற்போது கூட ரூ.1200 கோடி மதிப்பில் மதுரை மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வண்ணம் லோயர் கேம்ப் பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் திட்டப்பணிக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதற்கு முதலமைச்சர் வருகை தர உள்ளார்.இத்திட்டத்தின் மூலம் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 24 மணிநேரமும் குடிநீர் தட்டுப்பாடியின்றி கிடைக்கும்.

ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் மதுரைக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை குறிப்பாக மதுரை மாநகராட்சி வளர்ச்சிக்காக அம்மா ரூ.250 கோடி நிதி உதவி செய்தார். ஆனால் திமுக ஆட்சி காலத்தில் மதுரையை சீரழிக்க 250 ரவுடிகள் இருந்தனர்.தற்பொழுது சாதியை காட்டி மதத்தை பேசி திமுக வெற்றி பெற வேஷம் போட்டு வருகிறார்கள்.மதுரையில் கடந்த 10 ஆண்டுகளில் ரவுடி அராஜகம் இல்லை.

முதலமைச்சர் சாதனைத் திட்டங்களை மதுரை மாநகர் மாவட்ட கழகத்தில் உள்ள மதுரைமத்தி, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளில் வீடு, வீடாக எடுத்துச் சென்று இந்த நான்கு தொகுதிகளிலும் கழகத்திற்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்து நம்மை எதிர்க்கும் அனைத்து எதிர்கட்சிகளை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். அதுவரை நீங்கள் இரவு பகல் பாராது பணியாற்றுங்கள் உங்களுக்கு உரிய அங்கீகாரத்தை முதல்வரும், துணை முதல்வரும் வழங்குவார்கள்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் சி.தங்கம், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், கழக இளைஞர் அணி இணை செயலாளர் கிரம்மர் சுரேஷ், கழக மாணவர் அணி இணை செயலாளர் பா.குமார், கழக இலக்கிய அணி இணை செயலாளர் வில்லாபுரம் ரமேஷ், முன்னாள் துணை மேயர்கள் நவநீதகிருஷ்ணன், திரவியம், பகுதி கழக செயலாளர்கள் அண்ணாநகர் முருகன், ஜெயவேல், செந்தில்குமார், கருப்புசாமி, மாவட்ட அணி நிர்வாகிகள் எஸ்.டி.ஜெயபாலன், சோலை ராஜா, இரா.அரவிந்தன், மாணிக்கம், இந்திராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.