தமிழகம்

1-ந்தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

சென்னை

தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி நவம்பர் 30-ந் தேதி நகரும்.

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் 1 முதல் 3-ந் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கரையை கடந்த நிவர் புயல் தெற்கு ஆந்திராவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 34 செமீ மழைப்பொழிவு இருக்கும். கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை 29 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 15 சதவீதம் குறைவு.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.