மற்றவை

ஆர்.கே.நகரில் இரண்டாம் கட்டமாக 100-மகளிர் குழுக்கள் உருவாக்கம் – ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்தார்

சென்னை

ஆர்.கே.நகரில் இரண்டாம் கட்டமாக 100-மகளிர் குழுக்களை உருவாக்கி மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், தொடங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சரின் உத்தரவையேற்று ஆர்.கே.நகர் பகுதி தண்டையார்பேட்டையில் பவர் குப்பம், புதுமனை குப்பம், வினாயகபுரம், திடீர் நகர், பல்லவன் நகர் காசிபுரம், “பி” பிளாக், ஒய்.எம்.சி.குப்பம், உள்ளிட்ட 43-வது வட்ட பகுதிகளில் இரண்டாம் கட்டமாக 100- மகளிர் குழுக்களை வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உருவாக்கி 500 பேருக்கு அரிசி, புடவை, ஐந்து வகையான மளிகை பொருட்களை நலத்திட்ட உதவிகளாக வழங்கினார்.

மகளிர் குழுக்களிடையே வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசியதாவது:-

முதல்வர், துணை முதல்வர், மகளிர் குழுக்களுக்கு எண்ணில்லா திட்டங்களை உருவாக்கி தந்தவர்கள் அவர்களின் திட்ட செயல்களால் மகளிர் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அவர்களின் பலத்தால் தொடர்ந்து கழக அரசுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

மேலும் தகுதி வாய்ந்த மகளிருக்கு அரசின் திட்டம் கிடைக்க பெறாமல் உள்ளவர்களுக்கு அரசின் திட்டங்களை கிடைக்க மாவட்ட கழகம் 100 சதவீதம் துணையாக நிற்கும் கொரோனா நிவாரண பணிகள் மற்றும் நிகர் புயல் பணிகளில் தமிழக முதலமைச்சரின் அபரிமிதமான மக்கள் பணியானது மாவட்டந்தோரும் ஆய்வு கூட்டங்கள் நடத்தி முன்னெச்சரிக்கை பணிகளை துரிதபடுத்தி இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக இன்று தமிழகத்தை தலை நிமிரசெய்தவர்.

இவ்வாறு வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசினார்.

இந்நிகழ்வில் ஏ.கணேசன், ஆர்.வி.அருண்பிரசாத், சந்தனசிவா, எம்.மாலா, நாகம்மா, எல்.எஸ். மகேஷ்குமார், பாசறை என்.குமார், எஸ்.மனோ (எ) மனோகர், எம்.ஹரிகிருஷ்ணன், இ.எம்.எஸ் நிர்மல் குமார், டி.பிரபாகரன், ஏ.இளவரசன், ஜெயந்தி, எஸ்.பிரேமா,தேவி, வி.எம்.மதன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.