தற்போதைய செய்திகள்

கழகத்தின் வளர்ச்சி – வெற்றிக்கு பாடுபட மதுரை மண்டல தொழில்நுட்ப பிரிவு சூளுரை – மதுரை மண்டல தகவல் தொழிநுட்ப பிரிவு தீர்மானம்

மதுரை

இந்தியாவிலேயே தமிழகத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்திற்கு உயர்த்திய முதலமைச்சரின் சாதனைகளை சமூக வலைதளம் மூலம் எட்டரை கோடி மக்களிடம் எடுத்துச் செல்வோம் என்று மதுரை மண்டல தகவல் தொழிநுட்ப பிரிவு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் புதிய நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்தியன் ஆலோசனை வழங்கி நிறைவேற்றிய தீர்மானங்கள் வருமாறு:-

அம்மாவின் பாத தடத்தில் அடிபிறழாமல் சரித்திரம் போற்றும் சாதனைமிகு பொற்கால ஆட்சியை நடத்திவரும்
தமிழ் மக்களின் பாதுகாவலர், இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், முதலமைச்சர் எடப்பாடியார் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வகைலும், பாரதப்பிரதமரே பாராட்டும் வகையிலும், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை எடுத்து மக்களின் பாராட்டைப்பெற்றுள்ளார். தனது அயராத உழைப்பால் இந்திய அளவில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 8.03 சதவீதமாக உயர்த்தி அதன்மூலம் தமிழகத்தின் தனிநபர் வருமானத்தை இருமடங்காக உயர்த்தி உள்ளார்.

நிவர் புயல் பாதிப்பை தடுக்க போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு எந்த உயிரிழப்பும் இல்லாமல் மக்களைக் காத்ததோடு,கடந்த 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் இந்திய அளவில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்தை முதன்மை இடத்திற்கு கொண்டு வந்து இந்தியா டுடே நிறுவனத்தின் விருதை பெற்று தந்துள்ளார். அன்னை தமிழகத்தை தொடர்ந்து இந்தியாவிலேயே சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்திற்கு உயர்த்தி அம்மாவின் கனவை நனவாக்கிய முதல்வர் எடப்பாடியாருக்கு மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு கோடானகோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

இந்த சாதனை திட்டங்களை சமூக வலைதளம் மூலம் எட்டரை கோடி தமிழ் மக்களுக்கு எடுத்துச்சென்று கழகத்தின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காவும் பணியாற்றுவோம் என்று மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சூளுரை ஏற்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் மாவட்ட தகவல் நுட்பப் பிரிவு செயலாளர் ஜெயபால், நிர்வாகிகள் கவுரிசங்கர், மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.