மதுரை

மேலூரில் 49அடி உயர கம்பத்தில் கழகக்கொடி- மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்றினார்

மதுரை

கழகத்தின் 49-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மேலூரில் 49 அடி உயர கம்பத்தில் கழகக் கொடியை மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஏற்றி வைத்தார்.

கழகத்தின் 49-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மேலூரில் கழக கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் மதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கலந்து கொண்டு 49 அடி உயர கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

பின்னர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசியதாவது:-

1972-ம் ஆண்டு இந்த புனித இயக்கத்தை புரட்சித்தலைவர் தோற்றுவித்தார். பேரறிஞர் அண்ணா படம்பொறித்த இந்த கழகக் கொடியை ஏற்றும்போது கழகத் தொண்டர்கள் தங்களின் ரத்தத்தை சிந்தி கொடியேற்றினர். புரட்சித்தலைவர் எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை ஆரம்பித்தாரோ அதை அம்மா நிறைவேற்றிக் காட்டினார்.

தற்போது முதல்வரும், துணை முதல்வரும் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றனர். தற்போது கழக 49-வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு கழகக்கொடியை ஏற்றும் நல்வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கழகக் கொடி உயர பறப்பது போல் நமது இயக்கம் உயர உயர சென்று கொண்டிருக்கும்.

இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அம்மா கூறியுள்ளார். அதே முழக்கத்தை முதல்வரும், துணை முதல்வரும் கூறி வருகின்றனர். ஆனால் இன்றைக்கு ஸ்டாலின் மகன் உதயநிதி 2021 என்பதற்கு பதிலாக வரும் 2001ம் ஆண்டில் திமுகவிற்கு வாக்கு அளியுங்கள் என்று கூறுகிறார். அதுமட்டுமல்லாது தங்கத்தமிழ்செல்வன் வருகின்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் என்று தன்னை அறியாமலே பேட்டி கொடுத்து விட்டார்.

அதேபோல் ஸ்டாலினும் 2021ல் அதிமுக ஆட்சிக்கு வந்த போதிலும் என்று தன்னை அறியாமலே கூறி வருகிறார். இப்படி திமுகவைச் சேர்ந்த அனைவருமே திமுக தோற்று விடும் என்று பத்திரிகையில் கூறிவருவது மக்கள் எல்லாம் கவனித்து தான் வருகின்றனர்

இந்த மேலூர் தொகுதி என்பது கழகத்திற்கு முதல் வெற்றியை தரும் தொகுதியாகவும் தொடர்ந்து இந்த தொகுதி கழகத்தின் இரும்புக் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சரின் சாதனை திட்டங்களை எல்லாம் மக்களிடத்தில் எடுத்துரைத்து 2021 சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் அதிக வாக்குகளை பெற்று தந்த தொகுதி மேலூர் தொகுதி என்ற வரலாற்றை நீங்கள் உருவாக்கி தர வேண்டும்.

இவ்வாறு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பேசினார்