தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரூ.15.50 லட்சம் ஊக்கத்தொகை – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்

திருப்பூர்

64- வது தேசிய பள்ளிகள் கூட்டமைப்பு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற 10 மாணவ, மாணவிகளுக்கு ரூ.15.50 லட்சத்திற்கான ஊக்கத்தொகையை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

சட்டீஸ்கர் மாநிலத்தில், கடந்த 18-12-2018 முதல் 22-12-2018 வரை நடைபெற்ற 64-வது தேசிய பள்ளிகள் கூட்டமைப்பு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாணவ, மாணவிகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தங்க பதக்கம் (ரூ.2 லட்சம்), வெள்ளி பதக்கம் (ரூ.1.50 லட்சம்) மற்றும் வெண்கல பதக்கம் (ரூ.1 லட்சம்) மொத்தமாக ரூ.15.50 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.