தற்போதைய செய்திகள்

288 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை

ஆரணியில் நிவர் புயல் காரணமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 288 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் வசித்த 288 குடும்பங்களை சேர்ந்த 752 பேர் 25 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, பாய், மற்றும் போர்வை, வேட்டி, சேலை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த முகாம்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடர்ந்து கண்காணித்து வந்தார்.

இந்நிலையில் பையூர், மொழுகம்பூண்டி, ராட்டினமங்கலம், இரும்பேடு உள்ளிட்ட 25 முகாம்களில் தங்கியுள்ள 288 குடும்பங்களுக்கும் தலா 10 கிலோ அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் (பொறுப்பு) ஜெயராம், வட்டாட்சியர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளார்கள் ஜி.வி.கஜேந்திரன், வழக்கறிஞர் க.சங்கர், பி.ஆர்.ஜி.சேகர், ப.திருமால், மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, நகர செயலாளர் எ.அசோக்குமார், மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், நகர மாணவரணி செயலாளர் கே.குமரன், தகவல் தொழில் நுட்பபிரிவு மாவட்ட செயலாளர் சரவணன், பையூர் ஒன்றியகுழு உறுப்பினர் கலா ரகு, ஒன்றிய அம்மா பேரவை பையூர் எ.கே.ஆர்.சதிஷ். பையூர் ஊராட்சி தலைவர் சரவணன், முன்னாள் தலைவர் மேகலா, வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.