மதுரை

மதுரைக்கு 4-ந்தேதி வருகை தரும் முதலமைச்சருக்கு எழுச்சிமிகு வரவேற்பு – வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எம்.ஏ. ஏற்பாடு

மதுரை

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் 4-ந்தேதி மதுரைக்கு வருகை தரும் முதலமைச்சருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது என மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

மதுரை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் வழங்கி உள்ளார். தலைநகர் டில்லி இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் உருவாக்கி உள்ளார். அதேபோல் உயர்மட்ட பாலங்களை அதிகமாக உருவாக்கியுள்ளார். மேலும் உயர்மட்ட பாலங்களுக்கு தலைவர் பெயரை வைக்க மாட்டார்கள். ஆனால் அந்த விதியை மாற்றி கொடுத்து மதுரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் பெயரை உயர்மட்ட பாலத்திற்கு சூட்டியுள்ளார். அதேபோல் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு புரட்சித்தலைவர் பெயரை சூட்டியுள்ளார்.

இப்படி தொடர்ந்து புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் புகழையும் மங்கா புகழாக உருவாக்கி வருகிறார். மதுரை புறநகர் பகுதிகளில் சாலை திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை முதலமைச்சர் உருவாகி கொடுத்துள்ளார்.

ரூ.1200 கோடி மதிப்பில் லோயர் கேம்ப் பகுதிகளில்இருந்து குழாய் மூலம் மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு இருபத்தி மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தினை வருகின்ற நாலாம் தேதி மதுரையில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டு உள்ள ரூ.33 கோடி செலவில் புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடத்தையும் திறந்து வைத்து அதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் நோய் தடுப்பு பணிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சருக்கு நாம் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும் கடந்தமுறை மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் கடந்த முறை முதலமைச்சர் வருகை தரும் பொழுது சிறப்பாக வரவேற்பு அளித்தோம்அதேபோல் வருகின்ற 4ம் தேதி மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் கருப்பாயூரணியில் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு தர வேண்டும்.

இவ்வாறு வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் (எ) செல்வம், மாவட்ட கழக பொருளாளர் அம்பம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர்கள் தக்கார் பாண்டி, நிலையூர் முருகன், கார்சேரி கணேசன், கே‌.பொன்னுச்சாமி, பொன்.ராஜேந்திரன், குலோத்துங்கன், வாசு (எ) பெரியணன், பகுதி கழக செயலாளர்கள் வண்டியூர் செந்தில்குமார், ஜீவானந்தம், கோபி, கருணா, முருகேசன், பன்னீர்செல்வம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் மேலூர் பெரியசாமி, மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் கருத்த கண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஜபார், மாவட்ட மீனவரணி அணி செயலாளர் பள்ளப்பட்டி முருகேசன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் சண்முகப்பிரியா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜானவாஸ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கள்ளந்தி சேகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயபால், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணிச் செயலாளர் அன்புச்செல்வன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் சேதுராமன், பகுதி கழக துணை செயலாளர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், தனம் போஸ், ஜெய ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்