தற்போதைய செய்திகள்

விருகம்பாக்கம் தொகுதியில் மருத்துவ முகாம் – விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ ஆய்வு

சென்னை

தென்சென்னை தெற்கு மாவட்டம், விருகம்பாக்கம் பகுதியில் 129-வது வார்டு சாலிகிராமம் காவேரிரங்கன் நகர் பிள்ளையார் கோவில் அருகில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவ முகாம் நடைப்பெற்றது.

விருகம்பாக்கம் தொகுதியில் தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி தொகுதி முழுவதும் சுற்றி வந்து கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஒவ்வொரு வார்டு வாரியாக ஏழை குடும்பங்களுக்கு ஒவ்வொரு நாளும் தவறாமல் எண்ணற்ற நிவாரண உதவிகளை விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ செய்து வருகிறார்.

இந்நிலையில் 129- வது வார்டு சாலிகிராமம் காவேரிரங்கன் நகர், பிள்ளையார் கோவில் அருகில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கழக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சு.கமலகண்ணன், கோடம்பாக்கம் மண்டல அதிகாரி வினித், ஏ.எம்.காமராஜ், வட்ட செயலாளர் பி.கசாலி, எஸ்.பி.குமார், எம்ஜிஆர் நகர் குட்டி, ஜெகன், செல்வநாயகம், வைகுண்டராஜன், வீரபாண்டி, டி.ரமேஷ், டி.சி.அசோக்குமார், செல்வமணி, முரளி, டாடா.செல்வம், பூவரசன், ராக்கி, பில்டர்.மோகன், வழக்கறிஞர் சதிஷ், ஸ்ரீனிவாசன், ஆதவன், சங்கர், முரளி மற்றும் மண்டல உதவி ஆய்வாளர், சுகாதாரத்துறை அதிகாரிகள், கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.