திருவண்ணாமலை

ஜவ்வாதுமலை ஆற்றின் குறுக்கே 3.45 கோடியில் மேம்பாலம் – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ பூமிபூஜை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள ஆற்றின் குறுக்கே ரூ.3.45 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை ஒன்றியம் கானமலைப் பகுதியிலிருந்து நீப்பளம்பட்டு செல்ல குறுக்கே செல்லும் காட்டாற்றில் ரூ. 3.45 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

இந்த மேம்பாலம் அமைவதால் ஜவ்வாது மலையிலிருந்து வேலூர் செல்ல முடியும். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் அடித்து செல்லப்பட்ட நிலையில் இப்பகுதியினர் மழைக்காலங்களில் எங்கும் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வின் முயற்சியால் தற்போது ரூ.3.45 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. நபார்டு திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வனத்துறையினரின் அனுமதி பெற்று 60 மீட்டர் நீளத்திற்கு 4 கண் கொண்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் கோட்ட உதவிபொறியாளர் ரகுராமன், வட்டாட்சியர் சாப்ஜான், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, வழக்கறிஞர் செம்பியன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் ஜி.துரை, தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி கபாலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.