தற்போதைய செய்திகள்

தண்டையார்பேட்டை பகுதியில் 3-ம் கட்டமாக 240 மகளிர் குழுக்கள் – ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்தார்

சென்னை

சென்ைன தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதியில் 3-ம் கட்டமாக 240 மகளிர் குழுக்களை வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சென்ைன தண்டையார்பேட்டை 47-வது வட்டம் சிவாஜி நகர், கார்னேஷன் நகர், ஜெ.ஜெ.நகர், மீனாம்பாள் நகர், என்.எஸ்.கே.சாலை, ஜீவா நகர், சத்தியமூர்த்தி நகர், இளையமுதலி தெரு, 41-வது வட்டம் எழில் நகர், காமராஜர் நகர், எம்ஜிஆர் நகர், சத்தியா நகர், சந்திரசேகர் நகர், கருமாரியம்மன் நகர், கோபால் நகர், கண்ணகி நகர், ஆகிய பகுதிகளில் 3-ம் கட்டமாக 240 மகளிர் குழுக்களை வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன் பகுதி செயலாளர்கள் ஆர்.நித்தியானந்தம், எம்.என்.சீனிவாச பாலாஜி, டேவிட் ஞானசேகரன், வட்ட செயலாளர்கள் ஏ.வினாயகமூர்த்தி, எம்.நாகூர்மீரான், பி.கே.யுவராஜ், பி.ஜே.பாஸ்கர், எம்.வேலு, எல்.எஸ். மகேஷ்குமார், ஜெஸ்டின் என்.பிரேம்குமார், பாசறை என்.குமார், எஸ்.வி.ரவி, இஎம்எஸ்.நிர்மல்குமார், மரக்கடை ஜெ.விஜி, டி.பிரபாகரன், டேனியல் சச்சின் மணி, சி.முருகேசன், புலிமுருகன், கே.பிரகாஷ், மக்கள் மகேந்திரன்,
நெல்லை சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.