தற்போதைய செய்திகள்

பவானியில் 754 பயனாளிகளுக்கு ரூ.84.63 லட்சம் நலத்திட்ட உதவி – அமைச்சர் கே.சி.கருப்பணன வழங்கினார்

ஈரோடு

ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் 754 பயனாளிகளுக்கு ரூ.84.63 லட்சம் மதிப்பீட்டில் முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விலையில்லா வீட்டுமனை பட்டா, புதிய மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஏழை, எளியோர், விவசாயிகள் மற்றும் நெசவாளர்களின் நலன் காக்க பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கூட்டுறவு சங்கங்களின் வாயிலாக பயிர்கடன், மத்திய காலக்கடன், நகைக்கடன், வட்டியில்லா கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், கறவை கடன் போன்ற பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் வருவாய் துறையின் மூலம் தகுதி வாய்ந்தவர்களுக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதிர் கன்னி உதவித்தொகை போன்ற பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பள்ளி கல்வித்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் அறிவித்த 7.5 சதவிகித இட ஒதுக்கீடு தமிழ்நாட்டின் அரசு பள்ளி ஏழை, எளிய மாணவர்களின் கனவு நனவாகும் வகையில் அமைந்துள்ளது.

ஏழை, எளிய மக்களின் நலன் கருதி வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள், விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள், சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கப்படுகிறது. சொந்த நிலம் இருப்பவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொள்வதற்கான மானியத் தொகை வழங்கப்படுகிறது.

முதலமைச்சா எடப்பாடி கே.பழனிசாமி மகளிர் நலன் காக்கும் வகையில், 10-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு பயின்ற பெண்களுக்கு 8 கிராம் தாலிக்கு தங்கத்துடன் திருமண நிதியுதவிகளை வழங்கி, கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு, கர்ப்ப கால பராமரிப்பு உதவித்தொகை, பிறந்த குழந்தைகளுக்கு அம்மா பரிசு பெட்டகம், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், கிராமப்புற ஏழை, எளிய மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், விலையில்லா ஆடுகள், மாடுகள், அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ்.எம்.தங்கவேலு, ஜெகதீஷ், மேகநாதன், கழக பொதுக்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, எம்.ஆர்.துரை, அம்மா பேரவை ஸ்ரீனிவாசன், பவானி யூனியன் சேர்மன் பூங்கோதை வரதராஜன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஏ.ராஜேந்திரன், சீனிவாசன், கராத்தே பெரியசாமி, மாதேஸ்வரன், தனபால், ஆவின் இயக்குநர் வாத்தியார் குப்புசாமி, நகர துணை செயலாளர் ஆண்டியப்பன் ராஜா (எ) யோகானந்த், ஒன்றிய துணை செயலாளர் பங்க்பான், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் ஏ.பிரகாஷ், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.