தற்போதைய செய்திகள்

எடப்பாடியாரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அயராது பாடுபடுவோம் – ஜனினி பி.சதீஷ்குமார் சபதம்

திருவண்ணாமலை

நம்மில் ஒருவர், நமக்கான முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அயராது பாடுபடுவோம் என்று வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனி பி.சதீஷ்குமார் சபதம் மேற்கொண்டார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் மாவட்ட ஆவின் தலைவரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

இக்கூட்ட்த்தில் வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனி பி.சதீஷ்குமார் பேசியதாவது:-

அம்மாவின் நல்லாசியுடன் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உருவாக்கி தந்துள்ளார். ஆனால் அரசின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி கொண்டிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகத்திரையைக் கிழித்து எறிந்து திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் கழகம் வெற்றி பெற நாம் அனைவரும் பாடுபட வேண்டும். உழைத்தவர்களுக்கு உயர்வு தருகின்ற ஒரே இயக்கம் கழகம் தான்.
இந்த மாபெரும் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பது நமக்கு பெருமை. பதவி எல்லாம் நமக்கான அங்கீகாரம் தான். பதவி வருகின்ற வரை காத்திருக்காமல் இன்றே உங்கள் பணிகளை துவங்க வேண்டும்.

நம்மில் ஒருவர், நமக்கான முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை 2021-ல் மீண்டும் அரியணையில் அமர்த்திட இந்த நேரத்தில் உறுதி ஏற்போம்.

இவ்வாறு தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல செயலாளர் ஜனனி பி.சதீஷ் குமார் பேசினார்.

இக்கூட்டத்தில் மண்டல துணை செயலாளர் எஸ்.தரணிதரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு தெற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட தலைவர் அன்பரசு, துணைத்தலைவர்கள் விஜயகுமார், கோபி, இணை செயலாளர்கள் பி.சத்யபிரகாஷ், வினோதினி, எஸ்.வெங்கடேஷ், கே.பெருமாள், கார்த்திகேயன், ஆர்.சிவசுப்பிரமணியன், பொருளாளர் எம்.கண்ணன் உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூர் தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.