டோக்கன்- பொய் வாக்குறுதிகளை நம்பி வாக்குகளை வீணடிக்காதீர் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வேண்டுகோள்

சென்னை
டோக்கன் மற்றும் போலி வாக்குறுதிகளை நம்பி வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என்று வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழகம் சார்பில் ஆர்.கே.நகர் 38-வது வட்டத்திற்குட்பட்ட நேதாஜி நகர், நேருநகர், வினோபா நகர், பட்டேல் நகர் கருணாநிதி நகர், நியூ வினோபா நகர், நெடுஞ்செழியன் நகர், சாஸ்திரி நகர், பரமேஸ்வரி நகர், ராஜசேகரன் நகர், அன்னை சந்தியா நகர், சுந்தரம்பிள்ளை நகர், உள்ளிட்ட பகுதிகளில் 4-ம் கட்டமாக 92 மகளிர் குழுக்களை மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ். ராஜேஷ், தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழச்சியில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், பேசியதாவது:-
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன் என போலி வாக்குறுதிகளுடன் 20 ரூபாய் டோக்கனை கொடுத்து சென்ற சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும் தொகுதி வளர்ச்சியில் எந்தவித அக்கறை காட்டவில்லை. மக்களின் அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற வில்லை.
வரும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழகத்தால் அடையாளப்படுத்தப்படும் வேட்பாளரை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொள்ளுங்கள். 20 ரூபாய் டோக்கனையும், பொய் வாக்குறுதிகளையும் நம்பி வாக்குகளை வீணடிக்க வேண்டாம்.
இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் ஆர்.எஸ்.ஜெனார்த்தனம், ஆர்.நித்தியானந்தம், எம்.என்.சீனிவாசபாலாஜி, மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், பாசறை மாவட்ட செயலாளர் ஜெஸ்டின் என்.பிரேம்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் எஸ்.முத்துசெல்வம், வட்ட செயலாளர்கள் வேல்முருகன், ராமமூர்த்தி, எம்.வேலு, எல்.எஸ்.மகேஷ்குமார், எஸ்.மனோ (எ) மனோகர்,
பாசறை என்.குமார், மக்கள் மகேந்திரன், இ.எம்.எஸ். நிர்மல்குமார், டி.பிரபாகரன், டேனியல் சச்சின் மணி, கே.பிரகாஷ், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.