தற்போதைய செய்திகள்

மறைந்த ராஜ்டிவி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரம் – கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்

சென்னை

மறைந்த ராஜ்டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்திற்கு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய இணைய இயக்குனரும், பெரம்பூர் கூட்டுறவு கட்டிட சங்க தலைவருமான கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் நிதியை வழங்கி ஆறுதல் கூறினார்.

வடசென்னை வடக்கு மேற்கு மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் கழகம் சார்பிலும், தனது சொந்த செலவிலும் ஏராளமான ஏழை குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கை காலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய இணைய இயக்குனரும், பெரம்பூர் கூட்டுறவு கட்டிட சங்க தலைவருமான கொளத்தூர் டி. கிருஷ்ணமூர்த்தி வழங்கி வருகிறார். அந்த வகையில் பத்திரிகையாளர்களுக்கும் அவர் உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாகக் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ் தொலைக் காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அறிந்து அவரது இல்லம் சென்ற தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய இணைய இயக்குனரும், பெரம்பூர் கூட்டுறவு கட்டிட சங்க தலைவருமான கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

வேல்முருகன் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அவர் தம் குடும்பத்தார், உறவினர், நண்பர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்தார்.அப்போது வேல்முருகன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் நிதியை வழங்கினார். மேலும் வேல்முருகனின் மகன் படிப்பு மற்றும் குடும்பத்தாருக்கு தேவையான உதவிகளை செய்வேன் எனவும் உறுதி அளித்தார்.