திருவண்ணாமலை

1000 பேருக்கு அத்தியாவசிய பொருள் தொகுப்பு – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வழங்கினார்

திருவண்ணாமலை

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகள் 1000 குடும்பத்தினருக்கு தலா 25 கிலோ அரிசி, 21 வகையான மளிகை, 19 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் வழங்கினார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம், போளூர், கலசப்பாக்கம், ஜவ்வாது மலை ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளை சேர்ந்த கிளைச் செயலாளர்கள்,

கழக நிர்வாகிகள், நலிவடைந்த கழக நிர்வாகிகள் என 1000 குடும்பத்தினருக்கு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் குடும்பத்திற்கு தேவையான தலா 25 கிலோ அரிசி, 21 வகையான மளிகை பொருட்கள் 19 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு மற்றும் முக கவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை திருவண்ணாமலை தெற்கு எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட கழக செயலாளரும், கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.பன்னீர்செல்வம் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

இதனை கழகநிர்வாகிகள் அரசு பின்பற்றிய சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக் கவசங்கள் அணிந்தும், கிருமி நாசினி பயன்படுத்தியும் பெற்றுச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, புதுப்பாளையம் ஒன்றிய கழக செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட கவுன்சிலர் தவமணி, ஒன்றியக்குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.