தற்போதைய செய்திகள்

பிணி நீக்கி உயிர் மீட்கும் மருத்துவர்களை மனதார வாழ்த்துவோம்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வாழ்த்து

சென்னை,

பிணி நீக்கி உயிர் மீட்கும் மருத்துவர்களை மனதார வாழ்த்துவோம் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

இதுகுறித்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களை வாழ்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதையாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நரம்புகளில் கருணை நிரப்பி
நாடித்துடிப்பில் சேவையை நிறுத்தி
கனிவை மொழியாக்கி
கடமையை கண்ணாக்கி
பிணி நீக்கி
உயிர் மீட்கும்
மருத்துவர்களை
மனதார வாழ்த்துவோம்!
நோய் தீர்க்கும் பணியதை
நேயமுடன் செய்துவரும்
நேசமிக்க மருத்துவர்கள் அனைவருக்கும்
மருத்துவர் தின நல்வாழ்த்துகள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.