தற்போதைய செய்திகள்

விருகம்பாக்கம் தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் உதவித்தொகை – விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ வழங்கினார்

விருகம்பாக்கம் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் உதவிதொகையை விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ வழங்கி தொடங்கி வைத்தார்.

தென் சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மாற்றுதிறனாளிகளுக்கு அரசின் உதவி தொகையான ரூ.1000 ஐ மாற்றுத்திறனாளிகளுக்கு தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளாரும், விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி வழங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ஏற்கனவே அம்மா அரசின் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து கழக முன்னோடிகளும், கழக தொண்டர்களும் மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்த வண்ணம் உள்ளனர். தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக இந்த ஊரடங்கு காலங்களிலே மக்களின் வாழ்வாதரம் பாதிக்கபடக்கூடாது என்பதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மிக தீவிரமாக எடுத்து வருகிறார். இதன் மூலம் கொரோனா வைரஸ் நோய் தொற்று தற்போது கட்டுபடுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கபட்ட மாற்றுதிறனாளிகளுக்கு நமது அம்மாவின் அரசு அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதற்காக உதவி தொகையாக ரூபாய் 1000 ஐ வழங்கி வருகிறது. தற்போது உள்ள சூழலில் இந்த தொகையானது அவர்களின் குடும்பத்திற்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக இருக்கும்.

மேலும் கொரோனா நோய் தொற்று பரவாமல் கட்டுபாத்துவதற்கு மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் கைகளை அவ்வப்பொழுது சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும், முகத்தை அடிக்கடி கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியின் போது அனைவருக்கும் இலவசமாக பிஸ்கட், கபசுரக் குடிநீர், முககவசம், கிருமிநாசனி வழங்கபட்டது.

இந்நிகழ்ச்சியில்ஏ.எம்.காமராஜ், உதவி பொறியாளர் மணிமாறன், சி.கே.முருகன், வட்ட கழக செயலாளர் சுகுமார், மார்க்கெட் சுரேஷ், செல்வநாயகம், ஏ.அண்ணாமலை, வைகுண்டராஜன், வி.கே.தேவி, ஏ.கே.சீனிவாசன், ரா.தியாகராஜன், முரளி, குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.