தற்போதைய செய்திகள்

போளூர் சம்பத்கிரி லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு செல்ல மலை பாதை – முன்னாள் அமைச்சர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை

சென்னை

போளூர் சம்பத்கிரி லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு செல்ல மலை பாதை அமைத்து தர வேண்டும் என்று கழக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்து பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது முன்னாள் அமைச்சரும், போளூர் தொகுதி கழக சட்டமன்ற
உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி துணை கேள்வி ஒன்றை எழுப்பினார்.

அவர் பேசும்போது திருவண்ணாமலை மாவட்டம், போரூர் சட்டமன்ற தொகுதியில் உள்ளடங்கியிருக்கிற பிரசித்தி பெற்ற சம்பத்கிரி லட்சுமி நரசிம்மர் கோயில் 840 படிகளை கொண்டு, 1,500 அடி உயரத்திலே இருக்கிறது.

இந்த மலை கோயிலுக்கு செல்வதற்கு நான்கு சக்கர வாகன வசதியோடு கூடிய மலைப் பாதை அமைத்து தரப்படுமா? என்று கேட்டார்.

இதற்கு இந்து சமயநலத்துறை அமைச்சர் பதிலளிக்கையில், அனைத்து கோயில்களிலும் தேவைப்படும் வசதிகள் குறித்து ஆய்வு

செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரையில் நீங்கள் குறிப்பிட்ட கோயில் உள்ளது. எனவே இது குறித்து தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.