தற்போதைய செய்திகள்

குடிநீர் பிரச்சனையை தீர்க்க தானகவுண்டன்புதூர் கிராமத்தில் கிணறு தோண்டும் பணி – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம் தானகவுண்டன் புதூர் கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க கிணறு தோண்டும் பணியை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் தானகவுண்டன்புதூர் கிராமத்தில் குடிநீர் பிரச்சனை இருந்து வந்தது. அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வத்திடம் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும்படி கோரிக்கை வைத்திருந்தனர். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டு ஏரிக்கரை அருகே கிணறு தோண்டும் பணி துவங்கப்பட்டது.

இப்பணியினை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். பின்னர் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ பொதுமக்களிடம் கூறுகையில், இப்பணிகள் விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, மாவட்ட கவுன்சிலர் தவமணி, நிலவள வங்கி தலைவர் வேலு, முடியனூர் கூட்டுறவு சங்கத்தலைவர் துரைசாமி, கவுன்சிலர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.