தற்போதைய செய்திகள்

ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் – அமைச்சர் சி.வி.சண்முகம் பூமிபூஜை

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் நகராட்சி மற்றும் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை,பொதுப்பணித்துறை மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பாக ரூ1.54 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ,அண்ணாதுரை முன்னிலையில் அமைச்சர் சி.வி.சண்முகம் பூமிபூஜை மூலம் துவக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பாக பிரதான் மந்திரி கணிஜ் ஷேத்ரகல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வி.மருதூர் ஏரி ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும், சாலாமேடு பொன்னேரி ரூ.6.5 லட்சம் மதிப்பீட்டிலும், பானாம்பட்டு ஏரி ரூ.8 லட்சம் மதிப்பீட்டிலும்,அய்யனார் ஏரி ரூ.9.5 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.34.00 லட்சம் மதிப்பீட்டில் ஏரிகள் சீரமைப்புபணிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பாச்சனூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை உறுதித்திட்டம் 2020 – 2021-ன் கீழ் ரூ.71.55 லட்சம் மதிப்பீட்டில் நரிஓடை கீழ்மட்டத் தரைப்பாலம் அமைக்கும் பணியினையும்,ரூ.41.63 இலட்சம் மதிப்பீட்டில் வெள்ளப்பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணியினையும் மற்றும் ரூ.7.32 லட்சம் மதிப்பீட்டில் இணைப்புச்சாலை அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.120.50 லட்சம் மதிப்பீட்டில் பூமிபூஜை மூலம் அமைச்சர் சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம் டி.புதுப்பாளையத்தைச் சார்ந்த அஜித்குமார், த/பெ.வெண்பன் என்பவர் வடகிழக்கு பருமழையின் போது மின்னல் தாக்கி உயிரிழந்ததையடுத்து பிரதமமந்திரி தேசிய நிவாரணநிதியிலிருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை பெற்றோரிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் / கூடுதல் இயக்குநர் வெ.மகேந்திரன், செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை (நீ.வ.ஆ) ஜவகர், விழுப்புரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் லட்சுமிப்ரியா, செயற்பொறியாளர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை எஸ்.ராஜா,நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, உதவிசெயற்பொறியாளர் ஜோதிவேல், உதவிபொறியாளர் அருண்பிரசாத், கோலியனூர் சுரேஷ்பாபு காக நிர்வாகிகள் முரளி, கார்த்தி, கனகராஜ், ராஜசேகர், ஆறுமுகம், குமார், சுந்தர்ராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.